பிரெட் பனீர் உருண்டை

பிரெட்  பனீர் உருண்டை க்கான பட முடிவு

தேவையானவை:

பிரெட் ஸ்லைஸ் - 10 (ஓரம் நீக்கவும்), துருவிய பனீர் - 100 கிராம்,  உருளைக்கிழங்கு - ஒன்று (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), மிளகாய்த்தூள், உப்பு, மல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 200 கிராம்.

செய்முறை: 

துருவிய பனீர், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். பிரெட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்து உடனடியாக உள்ளங்கையில் வைத்து பிழிந்து, பனீர் மசாலா உருண்டையை அதில் வைத்து, நன்கு உருட்டி, சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும்.

Comments

Popular posts from this blog

கருப்பட்டி பணியாரம்

பொட்டுக்கடலை மாலாடு