உருளை பாயாசம்

உருளை பாயாசம் க்கான பட முடிவு

தேவையானவை :

உருளை கிழங்கு - கால் கிலோ

சர்க்கரை - 200 கிராம்

மில்க்மெயிட் - 4 டேபிள்ஸ்பூன்

முந்திரி - 10

நெய் - 4 டீஸ்பூன்

பால் - 1லிட்டர்

ஏலப்பொடி - 1 பொடித்தது

திராட்சை - 10


செய்முறை:

1.உருளை கிழங்கை வேகவைத்து தோல் உரித்து கேரட் சீவியல் சீவிக்கொள்ளவும் .

2.ஒரு வானலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி உருளை சீவலை பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ள வேண்டும். 

3.காய்ச்சிய பாலை சர்க்கரை சேர்த்து விட்டு வதக்கி கொண்டிருக்கும் உருளை சீவலுடன் சேர்க்கவேண்டும் . 

4.பாலும், உருளை சீவலும் சேர்ந்து வரும் வரை விடாமல் கிளற வேண்டும்.

5.பின்பு  சர்க்கரை, மில்க் மெயிட் சேர்க்க வேண்டும். மீதி நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலத்தூள் சேர்த்து சிறு பவுல்களில் ஊற்றி பறிமாற வேண்டும்.

Comments

Popular posts from this blog

பிரெட் பனீர் உருண்டை

கருப்பட்டி பணியாரம்

பொட்டுக்கடலை மாலாடு