அசோகா அல்வா
தேவையானவை :
பாசிப்பருப்பு - 1 கப்
சீனி - 2 1/2 கப்
நெய் - 2 1/2 கப்
முந்திரி / ஏலக்காய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
1.வானலியில் பாசிப்பருப்பை மிதமான சூட்டில் லேசாக வறுக்கவும்.
2.பிறகு தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
3.வேக வைத்த பாசிப்பருப்புக் கலவையுடன் சர்க்கரையை கலந்து கிளறவும்.
4.கிளறும்போதே சிறுக சிறுக நெய் ஊற்றி அடி பிடிக்காத வண்ணம் கிளறிக் கொள்ளவும்.
5.நன்றாக சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாத பதத்தில் வரும்போது, ஏலக்காய், முந்திரி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
Comments
Post a Comment