ஜவ்வரிசி பாயாசம்

தேவையானவை :
1. ஜவ்வரிசி – 50 கிராம்
2. சக்கரை – 75 கிராம்
3. பால் – 1/2 லிட்டர்
4. ஏலக்காய் – 4
5. முந்திரி – 10
6. நெய் – 4 தேக்கரண்டி
செய்முறை :
1. ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி அதில் ஜவ்வரிசியை வறுக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் பாதி பால் மற்றும் நீரை சேர்த்து கொதிக்கவிடவும். ஜவ்வரிசியை சேர்த்து அதன் கலர் மறைவுமளவிற்கு வேக வைக்கவும். மீதி பாலைவும் சேர்த்து கலக்கவும்.
2. நன்றாக வேக விடவும். ஏலக்காய் பொடி சேர்க்கவும். பின்னர் சக்கரை சேர்த்து கிளறவும். முந்திரி நெய்யில் வறுத்து சேர்த்தால் சுவையான ஜவ்வரிசி பாயாசம் ரெடி... இதனை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்.
Comments
Post a Comment