கோதுமை அல்வா

தேவையானவை :
கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய்ப்பொடி - 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
வென்னிலா எஸன்ஸ் - 2 துளிகள்
நெய் - 1 கப்
கனோலா எண்ணெய் - 1 கப்
முந்திரி - 15
உலர்ந்த திராட்சை - 15
செய்முறை :
1.மேலே கொடுத்துள்ள பொருட்களில் நெய், எண்ணெய் தவிர அனைத்தையும் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து ஒரு மணி நேரம் கலந்துவைக்கவும்.
2.பின்பு நான் ஸ்டிக் கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்.
3.அதே கடாயில் கரைத்து வைத்த மாவை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
எண்ணெய் மற்றும் நெய் மாற்றி மாற்றி சேர்த்து கிளறவும்.
4.கடைசியாக எண்ணெய் கக்க ஆரம்பிக்கும்போது வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்கவேண்டும்.
Comments
Post a Comment