கேரளா பால் பாயசம்

தேவைாயன பொருள்கள்
அரிசி – ஒரு கப்
பால் – 4 கப்
சர்க்கரை – 2 கப்
முந்திரிப்பருப்பு – 12
நெய் – 3 ஸ்பூன்
செய்முறை
அரிசியை 2 ஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர், ஒரு கப் பால் சேர்த்த ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவிடவும்.
பாலும், தண்ணீரும் கொதித்த பின் போட்டு அடுப்பை சிறு தீயில் வைத்து வேக விடவும்.
கொதிக்கும் போது அடிப்பிடிக்காமல் இருக்க விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
பாலிலேயே அரிசி வெந்து நன்கு கரைய வேண்டும். அரிசி நன்கு வெந்தபின், பாலை விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.
பால் நன்றாக சுண்டியப் பிறகு அடுப்பை குறைத்து, அதில் சர்க்கரைச் சேர்த்து கலக்கி முந்திரியை வறுத்துப் போட்டு இறக்கவும்.
Comments
Post a Comment