தேங்காய்ப்பால் பாயசம்

தேவையானவை :
முற்றிய தேங்காய் - 1
பச்சரிசி - 4 தேக்கரண்டி
வெல்லம்(துண்டுகளாக்கியது) - 1 கப்
சுக்குப்பொடி - 1 சிட்டிகை
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 4
திராட்சை - 4
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
செய்முறை :
1. ஒரு தேங்காய் முழுவதையும் துருவிக்கொள்ளவும். தேங்காய்த் துருவலில் பாதியளவை மிக்சியில் போட்டு சிறிது நீருடன் அரைத்து உலோக வடிகட்டியில் போட்டு முதல் பால், பிறகு இரண்டாம் பால் என்று பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. மீதமுள்ள தேங்காய்த் துருவலுடன், ஒரு மணி நேரம் ஊற வைத்த பச்சரிசியை மிக்சியில் போட்டு சற்று அரைத்து மேலும் இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்து மிக மிருதுவான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, முந்திரிப் பருப்பு, திராட்சை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பிறகு அதே பாத்திரத்தில் அரைத்த விழுது, 4 கப் நீர் சேர்த்து நன்றாக வேகும் வரை மெல்லிய தீயிலேயே கிளறவும்.
4. அரிசி நன்றாக வெந்தவுடன் தண்ணீருடன் கொதிக்க விட்டு தூசு நீங்க வடிகட்டிய வெல்ல நீர், முதல் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக ஒரு கொதி விடவும்.
5. பிறகு சுக்குப்பொடி, நெய்யில் வடித்த முந்திரி திராட்சை போட்டு இரு விரல்களுக்கு நடுவே பச்சைக் கற்பூரத்தை தூளாக்கிப் போட்டு பரிமாறவும்.
Comments
Post a Comment