கல்கண்டு பொங்கல்

கல்கண்டு பொங்கல் க்கான பட முடிவு

தேவையானவை :

பச்சரிசி - 1 கப்

பால் - 1 கப்

பாசிப்பருப்பு - 1/4 கப்

முந்திரி திராட்சை சேர்த்து ஒரு கைப்பிடி

கல்கண்டு - 2 கப்

நெய் - 1/4 கப்ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ - சிறிது

செய்முறை :

1.முதலில் பச்சரிசியையும்,பாசிப்பருப்பையும் கழுவி குக்கரில் போ‌ட்டு, தேவையான அளவு பாலும், தண்ணீரும் ஊற்றி குழைய வேக வைத்து இறக்கவும். 

2.ஒரு வானலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். 

3.அதே வாணலியில் அரை கப் தண்ணீர் ஊற்றி பொடித்த கல்கண்டை போட்டு பாகு காய்ச்சவும்.பாகு லேசாக கொதித்ததும் வெந்த அரிசி, பருப்பு கலவையை சேர்த்து கிளறவும்.

4.மீதமிருக்கும் நெய்யையும் ஊற்றி கிளறி கெட்டியாக வரும்போது இறக்கவும்.பிறகு முந்திரி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ சேர்த்து கிளறி பரிமாறவும்.


Comments

Popular posts from this blog

பிரெட் பனீர் உருண்டை

கருப்பட்டி பணியாரம்

பொட்டுக்கடலை மாலாடு