ரவா லட்டு

ரவா லட்டு க்கான பட முடிவு

தேவையானவை :

ரவை - 3/4 கிலோ

சர்க்கரை - 1/2 கிலோ

பால் - 1/4 லிட்டர்

முந்திரி - 10

ஏலக்காய் - 5 (பொடி செய்தது)

நெய் - 50 கிராம்

திராட்சை - 10


செய்முறை :

1.முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸியில்நைசாக பொடித்துக் கொள்ளவும்.

2.அடுத்ததாக சர்க்கரையையும், ஏலக்காயையும் மிக்ஸியில் தனித்தனியே பொடித்துக் கொள்ளவும்.

3. பிறகு சர்க்கரையையும், ரவையையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

4. இந்த கலவையில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

5. பிறகு காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக சேர்த்து உருண்டை பிடிக்கவும்.


Comments

Popular posts from this blog

பிரெட் பனீர் உருண்டை

கருப்பட்டி பணியாரம்

பொட்டுக்கடலை மாலாடு