குலாப் ஜாமூன்

குலாப் ஜாமூன் செய்முறை க்கான பட முடிவு

தேவையானவை :

நெய் - கால் கிலோ

குலாப் ஜாமூன் பவுடர் - 1 பாக்கெட்

ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

சர்க்கரை - 2 கப்

செய்முறை :

1.ஒரு பாத்திரத்தில் குலாப் ஜாமூன் பவுடரை கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்து கொள்ளவும்.அதை சிறிது நேரம் கழித்து உருண்டை அல்லது நீள உருண்டை வடிவில் தேவையான அளவுகளில் உருண்டை பிடித்து வையுங்கள். 

2.ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதனுடன் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். மற்றொரு வாணலியில் 1/4 கிலோ நெய்யில் பாதியை ஊற்றி அதில் 2 அல்லது 3 உருண்டைகளைப் போட்டு மரக்கரண்டியைக் கொண்டு திருப்பிக் கொண்டே இருங்கள்.அடுப்பு குறைவான  தீயில் இருக்க வேண்டும். 

3.உருண்டைகள் நன்கு சிவந்ததும் எடுத்து தனியாக வைக்கவும். இப்படியே அனைத்து உருண்டைகளையும் மீதமிருக்கும் நெய்யையும் ஊற்றி பொரித்து எடுக்கவும்.சர்க்கரை பாகு தயாரானதும் அதில் பொரித்த ஜாமுன் உருண்டைகளைப் போட்டு குறைந்தது 5 மணி நேரம் ஊறவிடவும்.சுவையான குலாப் ஜாமூன் ரெடி.


Comments

Popular posts from this blog

பிரெட் பனீர் உருண்டை

கருப்பட்டி பணியாரம்

பொட்டுக்கடலை மாலாடு