பால் கொழுக்கட்டை

தேவையானவை
1. பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு (அரிசியை ஊற வைத்து, உலர்த்தி அரைத்த மாவு), பொடித்த வெல்லம் - தலா ஒரு கப்
2. பால் - 3 கப்
3. ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
4. உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை
1. அரிசி மாவில் உப்பு சேர்த்துக் கிளறி, அதன் மீது கொதிக்கும் நீர் விட்டு, கெட்டியாகக் கிளறி வைத்துக் கொள்ளவும். அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
2. வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் பாலை ஊற்றவும்.
3. இதை அடுப்பில் வைத்து பால் கொதித்து வரும்போது அதில் உருட்டிய உருண்டைகளைப் போட்டு மீண்டும் கொதிக்க விடவும். (இதனை அகலமான பாத்திரத்தில் தான் செய்ய வேண்டும்) கொழுக்கட்டை வெந்து மேலே மிதந்து வரும் போது ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.
Comments
Post a Comment