பச்சைப்பயறு ஸ்வீட் சுண்டல்
தேவையான பொருட்கள்
பச்சைப்பயறு - ஒரு கப்
பொடித்த வெல்லம் - அரை கப்
தேங்காய்த் துருவல் - கால் கப்
ஏலக்காய்த்தூள் - சிறிது
உப்பு - சிறிதளவு
செய்முறை
பச்சைப்பயறை வெறும் கடாயில் வறுத்து சிறிதளவு உப்பு தேவைாயன அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, பச்சைப் பயறைக் கொட்டி, வெல்லத்தைப் பொடித்துச் சேர்க்கவும்.
சுண்டல் நன்கு சேர்ந்து வந்ததும், தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.
சுவைாயன பச்சைப்பயறு ஸ்வீட் சுண்டல் ரெடி
Comments
Post a Comment