கைக்குத்தல் அவல் உருண்டை

தேவையானவை:
சிவப்பு கைக்குத்தல் அவல் - ஒரு கப், பல்லாக நறுக்கிய தேங்காய் - ஒரு டீஸ்பூன் (சிறிதளவு நெய்யில் வதக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பாகு வெல்லம் - முக்கால் கப், வெண்ணெய் - அரை டீஸ்பூன், நெய், எண்ணெய் - தலா 50 கிராம்.
செய்முறை:
நெய், எண்ணெயை ஒன்றுசேர்த்து வாணலியில் ஊற்றி சூடாக்கவும். அதில் சுத்தம் செய்த அவலை சேர்த்து, நன்கு பொரித்து எடுக்கவும். ஏலக்காய்த்தூள், வதக்கிய தேங்காயை பொரித்த அவலுடன் கலந்து, வெண்ணெய் சேர்க்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி, அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும். பாகை அவல் கலவையில் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
Comments
Post a Comment