ஆனந்த சுவை பாஸந்தி

தேவையானவை :
புல் கிரீம் பால் - 2 லிட்டர்
குங்குமப்பூ - சிறிதளவு
சர்க்கரை - அரை கப்
அலங்கரிக்க தேவையானவை :
நெய் - 1 டீஸ்பூன்
பாதாம், முந்திரி, பிஸ்தா - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. அடி கனமான வாணலியில் பாலை ஊற்றி மெல்லிய தீயில் பாலை காய்க்கவும். பால் காய்ந்ததும் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கலந்து அதன் மேலே படியும் ஏடை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட வேண்டும்.
2. நடு நடுவே கலந்து, கலந்து பாலின் மேல் படியும் ஏடை, பாலின் அளவு 1/4 லிட்டர் அளவுக்கு வற்றும் வரை எடுத்து பாத்திரத்தில் போட்டவாறு இருக்க வேண்டும்.
3. பிறகு பாத்திரத்தில் சேகரித்த ஏடு, சர்க்கரை சேர்த்து மெல்லிய தீயில் நன்கு கிளறவும். நெய்யில் தோலுரித்த பாதாம், முந்திரி, பிஸ்தா வறுத்து பாஸந்தியின் மேல் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
Comments
Post a Comment