வெனிலா ஐஸ்கிரீம்

வெனிலா ஐஸ்கிரீம் க்கான பட முடிவு

தேவையானவை :

கட்டிப்பால் - 1/4 கப்

பால்மா - 1/2 கப்

தண்ணீர் - 3/4 கப்

வனிலா எஸன்ஸ் - 1/4 டீஸ்பூன்

செய்முறை :

1.ஒரு பாத்திரத்தில் கட்டிப்பாலுடன் கால் கப் தண்ணீர் விட்டு வனிலா சேர்த்து கரைத்து கொள்ளவும்.பால்மாவை மீதி அரை கப் தண்ணீரில் கட்டி இலாமல் கரைக்கவும்.இரண்டையும் தனித்தனியே ஃபிரீஸரினுள் அரை மணிநேரம் வைத்து எடுக்கவும்.

2.ஒரு பெரிய பாத்திரத்தில் ஜில் தண்ணீர் நிரப்பி அதனுள் பால்மா கரைசல் பாத்திரத்தை வைத்து கரண்டியால் நன்கு பொங்க பொங்க அடிக்கவும்.பின்னர் இதை கட்டிப்பால் கரைசலினுள் சேர்த்து மெதுவாக கலக்கவும். பின்னர் ஒரு தட்டையான பாத்திரத்தில் கலவையை ஊற்றி ஃபிரீஸரில்  ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும்.மீண்டும்  கரண்டியால் பொங்க பொங்க அடிக்கவும்.ஃபிரீஸரில் வைத்து இறுகியதும் எடுத்து பரிமாறலாம்.


Comments

Popular posts from this blog

பிரெட் பனீர் உருண்டை

கருப்பட்டி பணியாரம்

பொட்டுக்கடலை மாலாடு