சர்க்கரை பொங்கல்

சர்க்கரை பொங்கல் க்கான பட முடிவு

தேவையான பொருட்கள் :

பச்சரசி - 1 கப்

பாசி பருப்பு - 1 /2  கப்

வெல்லம் - 1 கப்

ஏலக்காய் 2

முந்திரி - 10

 திராட்சை-10

நெய் - 1 /4 கப்

பச்சை கற்பூரம் தேவைபட்டால்

செய்முறை :

1 . அரிசி ,பருப்பை களைந்து 7 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.

2 . அடுப்பை சிம்மில் வைத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் , சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.

3 . பச்சை வாசனை போனபிறகு பச்சை கற்பூரம் ,வெந்த அரிசி ,பருப்பு கலவையை வெள்ளத்தில் சேர்த்து சிறிது நெய் விட்டு கிளறவும்.

4 .பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி ,திராட்சை ,ஏலக்காய் பொடி சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்க்கவும் .


Comments

Popular posts from this blog

பிரெட் பனீர் உருண்டை

கருப்பட்டி பணியாரம்

பொட்டுக்கடலை மாலாடு