இனிப்பு பரோட்டா

தேவையானவை :
சர்க்கரை -- அரை கப்
பரோட்டா -- 1
ஏலக்காய் -- 2 (பொடித்தது)
தேங்காய் துருவல் -- ஒரு மூடி
முந்திரி -- 10
உலர்ந்த திராட்சை -- 10
செய்முறை :
1.முதலில் தேங்காய் துருவல்,முந்திரி,உலர்ந்த திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து கொள்ளவும்.
2.ஒரு பாத்திரத்தில் பரோட்டாவை நன்கு பொடிதாக பிய்த்து போடவும்.
3.சர்க்கரையை கால் கப் தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு முன்னால் இறக்கி விடவும்.
4.பிய்த்து போட்ட பரோட்டவுடன் சர்க்கரை பாகை கொஞ்சம் ஊற்றி ஒரு கிளறி பின் மேலே முழுவதையும் ஊற்றவும்.
5.அதன் மேலே நெய்யில் வறுத்த தேங்காய் துருவல், முந்திரி, திராட்சையை அலங்கரித்து கொடுக்கலாம்.
Comments
Post a Comment