இனிப்பு ராகி புட்டு பயறு

தேவையான பொருள்கள்
ராகிமாவு - கால் கிலோ
பாசிப்பயறு - கால் கிலோ
தேங்காய் - 1
உப்பு - தேவைக்கு
செய்முறை
ராகி மாவை தேவையான அளவு தண்ணீர் தெளித்து, தேவைக்கு உப்பு சேர்த்து விரவவும்.
விரவி வைத்த மாவை அப்படியே சிறிது நேரம் வைத்திருக்கவும். தேங்காயை துருவி வைக்கவும்.
மாவை மிக்ஸியில் பெரிய கப்பில் போட்டு மூன்று சுற்று சுற்றி எடுக்கவும். இதைப் போல் மாவு முழுவதையும் மூன்று முறையாக சுற்றி எடுக்கவும்.
இப்பொழுது மாவு பூப்போல ஆகிவிடும்.
பாசிப்பயறை வேக வைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
புட்டுக்குழலில் முதலில் தேங்காய் துருவலை வைத்து பின்பு மாவை வைத்து நிரப்பவும். அதன் மேல் மீண்டும் தேங்காய் துருவலை வைத்து நிரப்பவும்.
குக்கரில் தண்ணீர் வைத்து கொதிவந்ததும் அதில் புட்டுக்குழலை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான, சத்தான ராகிபுட்டு தயார்.
Comments
Post a Comment