Posts

சர்க்கரை பொங்கல்

Image
தேவையான பொருட்கள் : பச்சரசி - 1 கப் பாசி பருப்பு - 1 /2  கப் வெல்லம் - 1 கப் ஏலக்காய் 2 முந்திரி - 10  திராட்சை-10 நெய் - 1 /4 கப் பச்சை கற்பூரம் தேவைபட்டால் செய்முறை : 1 . அரிசி ,பருப்பை களைந்து 7 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். 2 . அடுப்பை சிம்மில் வைத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் , சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும். 3 . பச்சை வாசனை போனபிறகு பச்சை கற்பூரம் ,வெந்த அரிசி ,பருப்பு கலவையை வெள்ளத்தில் சேர்த்து சிறிது நெய் விட்டு கிளறவும். 4 .பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி ,திராட்சை ,ஏலக்காய் பொடி சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்க்கவும் .

அசோகா அல்வா

Image
தேவையானவை : பாசிப்பருப்பு - 1 கப் சீனி - 2 1/2 கப் நெய் -  2 1/2 கப் முந்திரி / ஏலக்காய் - தேவைக்கு ஏற்ப செய்முறை: 1.வானலியில் பாசிப்பருப்பை மிதமான சூட்டில் லேசாக வறுக்கவும்.  2.பிறகு தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.  3.வேக வைத்த பாசிப்பருப்புக் கலவையுடன் சர்க்கரையை கலந்து கிளறவும்.  4.கிளறும்போதே சிறுக சிறுக நெய் ஊற்றி அடி பிடிக்காத வண்ணம் கிளறிக் கொள்ளவும். 5.நன்றாக சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாத பதத்தில் வரும்போது, ஏலக்காய், முந்திரி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

ஆப்பிள் அல்வா

Image
தேவையானவை : சிவப்பு ஆப்பிள் - 3 சர்க்கரை - 1/2 கப் ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் நெய் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் முந்திரிப்பருப்பு - சிறிது செய்முறை: 1.நன்கு கழுவிய ஆப்பிளை தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துகொள்ளவும். 2.ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அதில் முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும். 3.அதே வாணலியில் மீதமுள்ள நெய்யை விட்டு, அரைத்து வைத்துள்ள ஆப்பிள் பழ விழுதைப் போட்டு வதக்கவும்.  4.அடுப்பை மிதமான தீயில் வைத்து, விழுதிலுள்ள நீர் வற்றி, சற்று கெட்டியானவுடன் அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.  5.பின்னர் அதில் கேசரி அல்லது ஆரஞ்சு வண்ணத்தைப் போட்டு, விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.  6.அல்வா சற்று இறுகி, வாணலியில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.சுவையான ஆப்பிள் ஹல்வா ரெடி.

இனிப்பு பரோட்டா

Image
தேவையானவை : சர்க்கரை -- அரை கப் பரோட்டா -- 1 ஏலக்காய் -- 2 (பொடித்தது) தேங்காய் துருவல் -- ஒரு மூடி முந்திரி -- 10 உலர்ந்த திராட்சை -- 10 செய்முறை : 1.முதலில் தேங்காய் துருவல்,முந்திரி,உலர்ந்த திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து கொள்ளவும். 2.ஒரு பாத்திரத்தில் பரோட்டாவை நன்கு பொடிதாக பிய்த்து போடவும். 3.சர்க்கரையை கால் கப் தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு முன்னால் இறக்கி விடவும். 4.பிய்த்து போட்ட பரோட்டவுடன் சர்க்கரை பாகை கொஞ்சம் ஊற்றி ஒரு கிளறி பின் மேலே முழுவதையும் ஊற்றவும். 5.அதன் மேலே நெய்யில் வறுத்த தேங்காய் துருவல், முந்திரி, திராட்சையை அலங்கரித்து கொடுக்கலாம்.

முந்திரி பர்பி

Image
தேவையானவை : முந்திரி பருப்பு - 1 1/2 கப் நெய் - 3 /4 கிராம் பால் - 1 /4 கப் சர்க்கரை - 3  கப் செய்முறை : 1. கொதிக்கும் நீரில் முந்திரி பருப்புகளை போட்டு 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் அதில் பால் விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். 2. அடுப்பில் வாணலியை வைத்து முந்திரி பருப்பு விழுது,    சர்க்கரையைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். 3. நன்றாக சுருண்டு பர்பி பதம் வரும் பொது அடுப்பை ஆப் செய்யவும். 4. பின்பு வாணலியை கீழே இறக்கி,  வைக்கவும் ஒரு தட்டில் நெய் தடவி பர்பி கலவையை கொட்டி விருப்பமான ஷேப்பில கட் செய்யவும்.   5. பாகு முறிந்து விடாமல் கவனிக்க வேண்டும். பர்பி வகைகளுக்கே பாகு மிகவும் இளம் கம்பிப் பதமாக இருக்க வேண்டும். 

உருளை பாயாசம்

Image
தேவையானவை : உருளை கிழங்கு - கால் கிலோ சர்க்கரை - 200 கிராம் மில்க்மெயிட் - 4 டேபிள்ஸ்பூன் முந்திரி - 10 நெய் - 4 டீஸ்பூன் பால் - 1லிட்டர் ஏலப்பொடி - 1 பொடித்தது திராட்சை - 10 செய்முறை: 1.உருளை கிழங்கை வேகவைத்து தோல் உரித்து கேரட் சீவியல் சீவிக்கொள்ளவும் . 2.ஒரு வானலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி உருளை சீவலை பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ள வேண்டும்.  3.காய்ச்சிய பாலை சர்க்கரை சேர்த்து விட்டு வதக்கி கொண்டிருக்கும் உருளை சீவலுடன் சேர்க்கவேண்டும் .  4.பாலும், உருளை சீவலும் சேர்ந்து வரும் வரை விடாமல் கிளற வேண்டும். 5.பின்பு  சர்க்கரை, மில்க் மெயிட் சேர்க்க வேண்டும். மீதி நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலத்தூள் சேர்த்து சிறு பவுல்களில் ஊற்றி பறிமாற வேண்டும்.

உலர் பழ லட்டு

Image
தேவையானவை : பேரிச்சம் பழம் - அரை  கப் (பொடித்தது ) கொப்பரை தேங்காய் துறுவல் - ஒரு மூடி முந்திரி - தேவைக்கேற்ப உலர் திராட்சை - தேவைக்கேற்ப பாதாம் - தேவைக்கேற்ப(ஊற வைத்து ) பிஸ்தா - தேவைக்கேற்ப மிக்ஸட் உலர் பழம் - 1 பாக்கட் நெய் - தேவைக்கேற்ப பொடித்த சர்க்கரை - தேவைக்கேற்ப செய்முறை : 1.ஒரு சுத்தமான பாத்திரத்தில் முந்திரி,பிஸ்தா,உலர் திராட்சை,பேரிச்சம் பழம்,பாதாம்,மிக்ஸட் உலர் பழம்,பொடித்த சர்க்கரை, நெய் சேர்த்து நன்கு கலக்கவும். 2.அவற்றை உருண்டைகளாக பிடித்து தேங்காய் துறுவலில் புரட்டி எடுக்கவும். 3.லட்டின் மேல் அலங்கரிக்க உலர் பழங்களை வைக்கலாம்.