Posts

Showing posts from June, 2017

சர்க்கரை பொங்கல்

Image
தேவையான பொருட்கள் : பச்சரசி - 1 கப் பாசி பருப்பு - 1 /2  கப் வெல்லம் - 1 கப் ஏலக்காய் 2 முந்திரி - 10  திராட்சை-10 நெய் - 1 /4 கப் பச்சை கற்பூரம் தேவைபட்டால் செய்முறை : 1 . அரிசி ,பருப்பை களைந்து 7 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். 2 . அடுப்பை சிம்மில் வைத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் , சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும். 3 . பச்சை வாசனை போனபிறகு பச்சை கற்பூரம் ,வெந்த அரிசி ,பருப்பு கலவையை வெள்ளத்தில் சேர்த்து சிறிது நெய் விட்டு கிளறவும். 4 .பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி ,திராட்சை ,ஏலக்காய் பொடி சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்க்கவும் .

அசோகா அல்வா

Image
தேவையானவை : பாசிப்பருப்பு - 1 கப் சீனி - 2 1/2 கப் நெய் -  2 1/2 கப் முந்திரி / ஏலக்காய் - தேவைக்கு ஏற்ப செய்முறை: 1.வானலியில் பாசிப்பருப்பை மிதமான சூட்டில் லேசாக வறுக்கவும்.  2.பிறகு தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.  3.வேக வைத்த பாசிப்பருப்புக் கலவையுடன் சர்க்கரையை கலந்து கிளறவும்.  4.கிளறும்போதே சிறுக சிறுக நெய் ஊற்றி அடி பிடிக்காத வண்ணம் கிளறிக் கொள்ளவும். 5.நன்றாக சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாத பதத்தில் வரும்போது, ஏலக்காய், முந்திரி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

ஆப்பிள் அல்வா

Image
தேவையானவை : சிவப்பு ஆப்பிள் - 3 சர்க்கரை - 1/2 கப் ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் நெய் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் முந்திரிப்பருப்பு - சிறிது செய்முறை: 1.நன்கு கழுவிய ஆப்பிளை தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துகொள்ளவும். 2.ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அதில் முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும். 3.அதே வாணலியில் மீதமுள்ள நெய்யை விட்டு, அரைத்து வைத்துள்ள ஆப்பிள் பழ விழுதைப் போட்டு வதக்கவும்.  4.அடுப்பை மிதமான தீயில் வைத்து, விழுதிலுள்ள நீர் வற்றி, சற்று கெட்டியானவுடன் அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.  5.பின்னர் அதில் கேசரி அல்லது ஆரஞ்சு வண்ணத்தைப் போட்டு, விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.  6.அல்வா சற்று இறுகி, வாணலியில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.சுவையான ஆப்பிள் ஹல்வா ரெடி.

இனிப்பு பரோட்டா

Image
தேவையானவை : சர்க்கரை -- அரை கப் பரோட்டா -- 1 ஏலக்காய் -- 2 (பொடித்தது) தேங்காய் துருவல் -- ஒரு மூடி முந்திரி -- 10 உலர்ந்த திராட்சை -- 10 செய்முறை : 1.முதலில் தேங்காய் துருவல்,முந்திரி,உலர்ந்த திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து கொள்ளவும். 2.ஒரு பாத்திரத்தில் பரோட்டாவை நன்கு பொடிதாக பிய்த்து போடவும். 3.சர்க்கரையை கால் கப் தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு முன்னால் இறக்கி விடவும். 4.பிய்த்து போட்ட பரோட்டவுடன் சர்க்கரை பாகை கொஞ்சம் ஊற்றி ஒரு கிளறி பின் மேலே முழுவதையும் ஊற்றவும். 5.அதன் மேலே நெய்யில் வறுத்த தேங்காய் துருவல், முந்திரி, திராட்சையை அலங்கரித்து கொடுக்கலாம்.

முந்திரி பர்பி

Image
தேவையானவை : முந்திரி பருப்பு - 1 1/2 கப் நெய் - 3 /4 கிராம் பால் - 1 /4 கப் சர்க்கரை - 3  கப் செய்முறை : 1. கொதிக்கும் நீரில் முந்திரி பருப்புகளை போட்டு 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் அதில் பால் விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். 2. அடுப்பில் வாணலியை வைத்து முந்திரி பருப்பு விழுது,    சர்க்கரையைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். 3. நன்றாக சுருண்டு பர்பி பதம் வரும் பொது அடுப்பை ஆப் செய்யவும். 4. பின்பு வாணலியை கீழே இறக்கி,  வைக்கவும் ஒரு தட்டில் நெய் தடவி பர்பி கலவையை கொட்டி விருப்பமான ஷேப்பில கட் செய்யவும்.   5. பாகு முறிந்து விடாமல் கவனிக்க வேண்டும். பர்பி வகைகளுக்கே பாகு மிகவும் இளம் கம்பிப் பதமாக இருக்க வேண்டும். 

உருளை பாயாசம்

Image
தேவையானவை : உருளை கிழங்கு - கால் கிலோ சர்க்கரை - 200 கிராம் மில்க்மெயிட் - 4 டேபிள்ஸ்பூன் முந்திரி - 10 நெய் - 4 டீஸ்பூன் பால் - 1லிட்டர் ஏலப்பொடி - 1 பொடித்தது திராட்சை - 10 செய்முறை: 1.உருளை கிழங்கை வேகவைத்து தோல் உரித்து கேரட் சீவியல் சீவிக்கொள்ளவும் . 2.ஒரு வானலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி உருளை சீவலை பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ள வேண்டும்.  3.காய்ச்சிய பாலை சர்க்கரை சேர்த்து விட்டு வதக்கி கொண்டிருக்கும் உருளை சீவலுடன் சேர்க்கவேண்டும் .  4.பாலும், உருளை சீவலும் சேர்ந்து வரும் வரை விடாமல் கிளற வேண்டும். 5.பின்பு  சர்க்கரை, மில்க் மெயிட் சேர்க்க வேண்டும். மீதி நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலத்தூள் சேர்த்து சிறு பவுல்களில் ஊற்றி பறிமாற வேண்டும்.

உலர் பழ லட்டு

Image
தேவையானவை : பேரிச்சம் பழம் - அரை  கப் (பொடித்தது ) கொப்பரை தேங்காய் துறுவல் - ஒரு மூடி முந்திரி - தேவைக்கேற்ப உலர் திராட்சை - தேவைக்கேற்ப பாதாம் - தேவைக்கேற்ப(ஊற வைத்து ) பிஸ்தா - தேவைக்கேற்ப மிக்ஸட் உலர் பழம் - 1 பாக்கட் நெய் - தேவைக்கேற்ப பொடித்த சர்க்கரை - தேவைக்கேற்ப செய்முறை : 1.ஒரு சுத்தமான பாத்திரத்தில் முந்திரி,பிஸ்தா,உலர் திராட்சை,பேரிச்சம் பழம்,பாதாம்,மிக்ஸட் உலர் பழம்,பொடித்த சர்க்கரை, நெய் சேர்த்து நன்கு கலக்கவும். 2.அவற்றை உருண்டைகளாக பிடித்து தேங்காய் துறுவலில் புரட்டி எடுக்கவும். 3.லட்டின் மேல் அலங்கரிக்க உலர் பழங்களை வைக்கலாம்.

கடலை மிட்டாய்

Image
தேவையானவை : வறுத்த நிலக்கடலை - 100 கிராம் வெல்லம் - அரை கிலோ செய்முறை : 1.ஒரு கனமான பாத்திரத்தில் வெல்லத்தை பாகு காய்ச்சவும், 2.பாகு முறுகியதும் வறுத்த கடலை பருப்பை போட்டுக் கிளறவும் . 3.அதை சதுர பலகையில் கொட்டி சூடு ஆறு முன் வில்லைகள் போடவும். இப்போது சுவையான சத்தான கடலை மிட்டாய் ரெடி

கருப்பட்டி பணியாரம்

Image
தேவையானவை : இட்லி மாவு - 1  கிண்ணம் கருப்பட்டி - அரை கிண்ணம் ரவை - 1 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் - 1 தேங்காய்ப்பூ - 1 டீஸ்பூன் செய்முறை: 1.இட்லி மாவில் உப்பு குறைவாக சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும்  2.ஒரு கனமான பாத்திரத்தில் வெல்லத்தைத் தூளாக்கி போட்டு அதில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரையவிடவேண்டும்.தீ மிதமாக இருக்கட்டும்.அதிகமானால் பாகு கருக வாய்ப்புண்டு.வெல்லம் கரைந்ததும் நீரை வடிகட்டி அதை ஆரவைக்கவேண்டும் . 3.வெறும் வாணலியில் ரவையை சூடு வர வறுத்து ஆறியதும் மாவில் கொட்டிக் கலந்து வைக்கவேண்டும்.மேலும் வெல்ல நீர்,ஏலக்காய்,தேங்காய்ப்பூ எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்க வேண்டும்  4.ஒரு 1/2 மணி நேரம் கழித்து குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவேண்டும். 5.சட்டி சூடாகியதும் ஒவ்வொரு குழியிலும் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு குழியின் முக்கால் பாகம் அளவிற்கு மாவை ஊற்றி,மூடி வேக வைத்தால் சுவையான கருப்படி பணியாரம் கிடைக்கும். 6.தீ மிதமாக இருக்கட்டும்.அதிகமானால் மேல் பாகம் தீய்ந்தும் உள்ளே வேகாமலும் இருக்கும்.

கல்கண்டு பொங்கல்

Image
தேவையானவை : பச்சரிசி - 1 கப் பால் - 1 கப் பாசிப்பருப்பு - 1/4 கப் முந்திரி திராட்சை சேர்த்து ஒரு கைப்பிடி கல்கண்டு - 2 கப் நெய் - 1/4 கப்ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ - சிறிது செய்முறை : 1.முதலில் பச்சரிசியையும்,பாசிப்பருப்பையும் கழுவி குக்கரில் போ‌ட்டு, தேவையான அளவு பாலும், தண்ணீரும் ஊற்றி குழைய வேக வைத்து இறக்கவும்.  2.ஒரு வானலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை ஆகியவற்றை வறுத்து எடுக்கவும்.  3.அதே வாணலியில் அரை கப் தண்ணீர் ஊற்றி பொடித்த கல்கண்டை போட்டு பாகு காய்ச்சவும்.பாகு லேசாக கொதித்ததும் வெந்த அரிசி, பருப்பு கலவையை சேர்த்து கிளறவும். 4.மீதமிருக்கும் நெய்யையும் ஊற்றி கிளறி கெட்டியாக வரும்போது இறக்கவும்.பிறகு முந்திரி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ சேர்த்து கிளறி பரிமாறவும்.

குலாப் ஜாமூன்

Image
தேவையானவை : நெய் - கால் கிலோ குலாப் ஜாமூன் பவுடர் - 1 பாக்கெட் ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை சர்க்கரை - 2 கப் செய்முறை : 1.ஒரு பாத்திரத்தில் குலாப் ஜாமூன் பவுடரை கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்து கொள்ளவும்.அதை சிறிது நேரம் கழித்து உருண்டை அல்லது நீள உருண்டை வடிவில் தேவையான அளவுகளில் உருண்டை பிடித்து வையுங்கள்.  2.ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதனுடன் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். மற்றொரு வாணலியில் 1/4 கிலோ நெய்யில் பாதியை ஊற்றி அதில் 2 அல்லது 3 உருண்டைகளைப் போட்டு மரக்கரண்டியைக் கொண்டு திருப்பிக் கொண்டே இருங்கள்.அடுப்பு குறைவான  தீயில் இருக்க வேண்டும்.  3.உருண்டைகள் நன்கு சிவந்ததும் எடுத்து தனியாக வைக்கவும். இப்படியே அனைத்து உருண்டைகளையும் மீதமிருக்கும் நெய்யையும் ஊற்றி பொரித்து எடுக்கவும்.சர்க்கரை பாகு தயாரானதும் அதில் பொரித்த ஜாமுன் உருண்டைகளைப் போட்டு குறைந்தது 5 மணி நேரம் ஊறவிடவும்.சுவையான குலாப் ஜாமூன் ரெடி.

கோதுமை அல்வா

Image
தேவையானவை : கோதுமை மாவு - 1 கப் சர்க்கரை - 2 கப் ஏலக்காய்ப்பொடி - 1 டீஸ்பூன் கேசரி பவுடர் - 1 சிட்டிகை வென்னிலா எஸன்ஸ் - 2 துளிகள் நெய் - 1 கப் கனோலா எண்ணெய் - 1 கப் முந்திரி - 15 உலர்ந்த திராட்சை - 15 செய்முறை : 1.மேலே கொடுத்துள்ள பொருட்களில் நெய், எண்ணெய் தவிர அனைத்தையும் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து ஒரு மணி நேரம் கலந்துவைக்கவும். 2.பின்பு நான் ஸ்டிக் கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும். 3.அதே கடாயில் கரைத்து வைத்த மாவை சேர்த்து நன்கு கிளறவேண்டும். எண்ணெய் மற்றும் நெய் மாற்றி மாற்றி சேர்த்து கிளறவும். 4.கடைசியாக எண்ணெய் கக்க ஆரம்பிக்கும்போது வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்கவேண்டும்.

ரவா லட்டு

Image
தேவையானவை : ரவை - 3/4 கிலோ சர்க்கரை - 1/2 கிலோ பால் - 1/4 லிட்டர் முந்திரி - 10 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) நெய் - 50 கிராம் திராட்சை - 10 செய்முறை : 1.முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸியில்நைசாக பொடித்துக் கொள்ளவும். 2.அடுத்ததாக சர்க்கரையையும், ஏலக்காயையும் மிக்ஸியில் தனித்தனியே பொடித்துக் கொள்ளவும். 3. பிறகு சர்க்கரையையும், ரவையையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். 4. இந்த கலவையில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். 5. பிறகு காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக சேர்த்து உருண்டை பிடிக்கவும்.

கல்கண்டு வடை

Image
தேவையானவை : உளுந்தம்பருப்பு - அரை கிலோ கல்கண்டு - அரை கிலோ உப்பு - 2 சிட்டிகை ஏலக்காய் - 6 ரீபைண்ட் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : 1. உளுந்தம் பருப்பை நன்றாகக் களைந்து ஊறவைத்து ஊறிய தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு கல் உரலிலோ, கிரைண்டரிலோ போட்டு அரைக்கவும். அவ்வப்போது சிறிது சிறிதாக கல்கண்டை சேர்த்து அரைக்க வேண்டும். தண்ணீர் சிறிது கூட சேர்க்கக்கூடாது. கல்கண்டிலிருந்து வரும் நீரே உளுந்தை அரைப்பதற்கு போதுமானதாக இருக்கும். 2. மாவை கெட்டியாக அரைத்து, உப்பு சிறிது சேர்த்து, ஏலக்காய்த் தூள் சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து ரீபைண்ட் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறுசிறு வடைகளாக (நடுவில் ஓட்டை செய்து) தட்டிப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

ஜிகிர்தண்டா

Image
தேவையானவை : பால் - ஒரு லிட்டர் சர்க்கரை - 8 தேக்கரண்டி சைனா கிராஸ் - 4 தேக்கரண்டி ரோஸ் சிரப் - 1 தேக்கரண்டி நன்னாரி ஸிரப் - 1 தேக்கரண்டி ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) - 1 பால் கோவா - 2 தேக்கரண்டி செய்முறை : 1. ஒரு லிட்டர் பாலை, சர்க்கரை சேர்த்து அடி கனமான வாணலியில் மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் பவுடர் சேர்க்கவும். பாலை அரைலிட்டராக சுண்ட வைத்து ஆறியவுடன் பிரிஜ்ஜில் 6 மணி நேரம் வைக்கவும். 2. சைனாகிராஸை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை' சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும். 3. குளிர்ந்த பாலை முதலில் நீளமான ஒரு கண்ணாடித் தம்ளரில் பாதியளவு ஊற்றவும். இப்போது பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும். பிறகு ரோஸ் ஸிரப், நன்னாரி ஸிரப் ஊற்றவும். 4. தொடர்ந்து வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று கொடுக்கவும்.

மலாய் ஜாம்

Image
தேவையானவை : 1. பன்னீர் - 2 கப் 2. சர்க்கரை - 2 கப் 3. தண்ணீர் - 4 கப் 4. குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன் மலாய்க்கு : 1. பால் - 2 கப் 2. சர்க்கரை - 2 கப் 3. ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் அலங்கரிக்க : 1. துருவிய பிஸ்தா - 1 டீஸ்பூன் 2. நறுக்கிய பாதாம் - 3 3. குங்குமப்பூ - 1 சிட்டிகை செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் பன்னீரை போட்டு, வெதுவெதுப்பான நீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பன்னீரை கொஞ்சம் எடுத்து நீள்வட்ட வடிவில் உருட்டி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.  2. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி, கொதிக்கும் போது அதில் சர்க்கரை மற்றும் குங்குமப்பூ சேர்த்து, மிதமான தீயில் பாகு போன்று வந்ததும், நீள்வட்டமாக உருட்டி வைத்துள்ள பன்னீரை மெதுவாக போட்டு, நன்கு கொதிக்க விட வேண்டும்.  3. பிறகு மிதமான தீயில் பாத்திரத்தை பத்து நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். இந்த நேரத்தில் பன்னீரானது மெதுவாக அந்த பாகுவை உறிஞ்சி பெரிதாக மாறும். அப்போது மூடியைத் திறந்து, மீண்டும் கொதிக்க விட வேண்டும். பன்னீரானது மென்மை...

பால் கொழுக்கட்டை

Image
தேவையானவை 1. பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு (அரிசியை ஊற வைத்து, உலர்த்தி அரைத்த மாவு), பொடித்த வெல்லம் - தலா ஒரு கப்  2. பால் - 3 கப்  3. ஏலக்காய்த்தூள் - சிறிதளவு  4. உப்பு - ஒரு சிட்டிகை  செய்முறை  1. அரிசி மாவில் உப்பு சேர்த்துக் கிளறி, அதன் மீது கொதிக்கும் நீர் விட்டு, கெட்டியாகக் கிளறி வைத்துக் கொள்ளவும். அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். 2. வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் பாலை ஊற்றவும். 3. இதை அடுப்பில் வைத்து பால் கொதித்து வரும்போது அதில் உருட்டிய உருண்டைகளைப் போட்டு மீண்டும் கொதிக்க விடவும். (இதனை அகலமான பாத்திரத்தில் தான் செய்ய வேண்டும்) கொழுக்கட்டை வெந்து மேலே மிதந்து வரும் போது ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.

அதிரசம்

Image
தேவையான பொருட்கள்: 1. பச்சரிசி - 1 கிலோ 2. வெல்லம் - 1 கிலோ ஏலக்காய் - 7 எண்ணெய் - தேவைக்கேற்ப 3. நெய் - 50 கிராம் செய்முறை: 1. அரிசியை தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊர வைத்து பின் நன்றாக கழுவி வெயிலில் உலர வைக்கவும். பிறகு அரசியோடு ஏலக்காய் சேர்த்து மிக்ஸி அல்லது மில்லிலோ அரைத்துக் கொள்ளவும். 2. பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தை அதில் போட்டு காய்ச்சவும். இதில் ரொம்ப முக்கியம் வெல்ல பாகுதான் அதை பக்குவமாக காய்ச்ச வேண்டும். 3. பதம் பார்க்க ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி காய்ச்சிய பாகை சிறுதுளி விடவும் கையில் ஒட்டாமல் திரட்டாக வந்தால் அதுதான் பதம். பாகுபதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். 4. பிறகு காய்ச்சியை பாகை மாவில் கொட்டி கொஞ்சமாக கொஞ்சமாக ஊற்றி கிளறி மூடி வைத்து மறுநாள் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் சிறிது நெய் தடவி ஒவ்வொன்றாக எண்ணையில் போட்டு எடுக்கவும்.

மங்களூர் இனிப்பு போண்டா

Image
தேவையானவை : 1. மைதா - 1 கப் 2. சர்க்கரை - அரை கப் 3. தயிர் - 1 1/2 கப் 4. பேக்கிங் சோடா - 1 சிட்டிகை 5. உப்பு - 1 சிட்டிகை 6. எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: 1. முதலில் ஒரு பாத்திரத்தில் மைதாவைப் போட்டு, அதில் பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.  2. பின்னர் அதில் தயிர் சேர்த்து ஓரளவு போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இனிப்பான மங்களூர் போண்டா ரெடி.

பால் கேசரி

Image
என்னென்ன தேவை? ரவை - 1 டம்ளர் சர்க்கரை - ஒன்றரை டம்ளர் பால் - 2 டம்ளர் கேசரி பவுடர் (விரும்பினால்) - சிட்டிகை முந்திரி, ஏலக்காய், திராட்சை - சிறிதளவு நெய் - தேவைக்கு. எப்படிச் செய்வது? ரவையை நன்றாக மணல் போல வறுக்கவும். விரும்பினால் லேசாக நெய் விட்டும் வறுக்கலாம். பாலைக் கொதிக்கவிட்டு அதில் வறுத்த ரவை, கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். ரவை வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை இளகி கேசரி பதம் வந்ததும் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.

தேங்காய் போளி

Image
தேவையானப் பொருட்கள் : மைதா அல்லது கோதுமை மாவு - 2 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் வெல்லம் பொடித்தது - 1 கப் சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன் நெய் - சுவைக்கு நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன் வரை மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை உப்பு - 1/2 டீஸ்பூன் செய்முறை : * கோதுமை (அல்லது மைதா) மாவுடன், உப்பு, மஞ்சள் தூள், நெய் சேர்த்து, சிறிது சிறிதாக நீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அதன் மேல் சிறிது நல்லெண்ணெயைத் தடவி, குறைந்தது அரை மணி நேரம் மூடி வைக்கவும். * வெல்லத்தில் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும். பின்னர் அத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும். * அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும். * வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி தடவி, அதில் எலுமிச்சை அளவு மாவை வைத்து பூரி வடிவில் தட்டி, அதன் மேல் ...

பிரெட் பனீர் உருண்டை

Image
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 10 (ஓரம் நீக்கவும்), துருவிய பனீர் - 100 கிராம்,  உருளைக்கிழங்கு - ஒன்று (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), மிளகாய்த்தூள், உப்பு, மல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 200 கிராம். செய்முறை:  துருவிய பனீர், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். பிரெட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்து உடனடியாக உள்ளங்கையில் வைத்து பிழிந்து, பனீர் மசாலா உருண்டையை அதில் வைத்து, நன்கு உருட்டி, சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும்.

நெய் உருண்டை

Image
தேவையானவை: வெண்ணெய் காய்ச்சிய வாணலியில் உள்ள கசண்டு - சிறிதளவு, அரிசி (அ) கோதுமை மாவு - சிறிதளவு, சர்க்கரை - சிறிதளவு. செய்முறை:  வெண்ணெய் காய்ச்சிய வாணலி / பாத்திரம் சூடாக இருக்கும்போது நெய்யை வடித்துவிட்டு மீதம் உள்ள கசண்டில், அரிசி (அ) கோதுமை மாவு மற்றும் சர்க்கரை (பொடிக்க வேண்டாம்) சேர்த்து, உருண்டை பிடிக்கவும்.

கமர்கட்

Image
தேவையானவை: துருவிய தேங்காய்  - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், நல்லெண்ணெய் - அரை டீஸ்பூன். செய்முறை:  துருவிய தேங்காயை மிக்ஸியில் சேர்த்து நீர் விடாமல் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரையவிட்டு, அடுப்பில் ஏற்றி, கொதி வந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி நுரைக்கவிடவும். அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு சுருள வதக்கி எண் ணெய் சேர்க்கவும். கலவை நன்கு முற்றிய நிலையில் இறக்கி, சிறிய நெல்லி அளவு உருண்டைகள் பிடித்தால்... கிராமிய மணத்துடன் கலக் கல் கமர்கட் ரெடி.

அரிசி மிட்டாய் கலர்ஃபுல் உருண்டை

Image
தேவையானவை: அரிசி மிட்டாய் (சீரக மிட்டாய்) - 100 கிராம், பாகு வெல்லம் - 75 கிராம், ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், வெண்ணெய் - அரை டீஸ்பூன் செய்முறை:   வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, வெண்ணெய் சேர்க்க வும். உருண்டை பிடிக்க ஏற்ற பதம் வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும். பாகு டன் அரிசி மிட்டாய், ரோஸ் எசன்ஸ் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும். குறிப்பு:  பாகு சரியான பதம் வரும் முன் மிட்டாய் கொட்டி கலந்தால், மிட்டாய் கலர் கரைந்து களேபரம் ஆகிவிடும். சற்று கவனத்துடன் பாகு தயாரிக்கவும்.

டேட்ஸ் கொப்பரை உருண்டை

Image
தேவையானவை: கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 200 கிராம், நீளவாக்கில் நறுக்கிய (அ) துருவிய உலர்ந்த கொப்பரை - அரை கப், வெனிலா எசன்ஸ் - சில துளிகள், நெய் - அரை டீஸ்பூன் செய்முறை:   பேரீச்சம்பழத்தில் சரிபாதி எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும் (அரைக்கக் கூடாது). இத்துடன் மீதமுள்ள பேரீச்சை, கொப்பரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து பிசைந்து (ஒட்டாமல் இருக்க அரை டீஸ்பூன் நெய்யை கைகளில் தடவிக்கொள்ள வேண்டும்) உருண்டைகள் பிடித்தால்... கிராண்டான டேட்ஸ் - கொப்பரை உருண்டை அதிக செலவின்றி வீட்டிலேயே தயார்

கைக்குத்தல் அவல் உருண்டை

Image
தேவையானவை: சிவப்பு கைக்குத்தல் அவல் - ஒரு கப், பல்லாக நறுக்கிய தேங்காய் - ஒரு டீஸ்பூன் (சிறிதளவு நெய்யில் வதக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பாகு வெல்லம் - முக்கால் கப், வெண்ணெய் - அரை டீஸ்பூன், நெய், எண்ணெய் - தலா 50 கிராம். செய்முறை:   நெய், எண்ணெயை ஒன்றுசேர்த்து வாணலியில் ஊற்றி சூடாக்கவும். அதில் சுத்தம் செய்த அவலை சேர்த்து, நன்கு பொரித்து எடுக்கவும். ஏலக்காய்த்தூள், வதக்கிய தேங்காயை பொரித்த அவலுடன் கலந்து, வெண்ணெய் சேர்க்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி, அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும். பாகை அவல் கலவையில்  சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

பொட்டுக்கடலை மாலாடு

Image
தேவையானவை: பொட்டுக் கடலை - 200 கிராம் (மாவாக் கவும்), பொடித்த சர்க்கரை - 100 கிராம், வறுத்த முந்திரி, திராட்சை (சேர்த்து) - 25 கிராம், உருக்கிய நெய் அல்லது வனஸ்பதி - 150 கிராம், மில்க் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை:   ஒரு பேஸினில் பொட்டுக்கடலை மாவு, மில்க் பவுடர், பொடித்த சர்க்கரை, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். உருக்கிய நெய் (அ) வனஸ்பதியை சூடாகச் சேர்த்து உருண்டைகள் பிடிக்கவும்.

முந்திரி உருண்டை

Image
தேவையானவை: முந்திரி - 100 கிராம், பாகு வெல்லம் - 75 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டீஸ்பூன். செய்முறை:   காடாயில் நெய் விட்டு, முந்திரியை லேசாக சிவக்கும்படி வறுத்து, நன்கு ஆறவிடவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி, அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூளை ஒன்றுசேர்த்து அதன் மீது பாகை கொட்டி கலந்து,  கைகளில் நெய் தடவி, உருண்டைகளாக பிடிக்கவும்.

ரவா மாலாடு

Image
தேவையானவை:  மெஷினில் அரைத்த ரவை - ஒரு கப், பொடித்த சர்க்கரை - அரை கப், வறுத்த முந்திரி - திராட்சை - சிறிதளவு, ஜாதிக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, நெய் அல்லது வனஸ் பதி- முக்கால் கப், பச்சைக் கற்பூரம் - மிளகு அளவு. செய்முறை:   பொடித்த ரவை, சர்க்கரை, வறுத்த முந்திரி - திராட்சை, ஜாதிக் காய்த்தூள், பொடித்த பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை ஒரு பேஸினில் சேர்த்து நன்கு கலக்கி, உருக்கிய நெய்/வனஸ்பதி விட்டு (அதிகம் காய்ச்சக் கூடாது), விருப்பமான அளவில் உருண்டைகளாக பிடிக்கவும்.

பாதாம் திராட்சை உருண்டை

Image
தேவையானவை: வறுத்த பாதாம் - 100 கிராம், பாகு வெல்லம் - 75 கிராம், நெய் - அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, உலர் திராட்சை - 10 முதல் 15. செய்முறை: அடி கனமான வாணலி (அ) நான்ஸ்டிக் கடாயில் வெல்லம், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும்.  அதனு டன் நெய், ஏலக்காய்த்தூள், திராட்சை, வறுத்த பாதாம் சேர்த்து... கை பொறுக்கும் சூட்டில் உருண்டை கள் பிடிக்கவும். குறிப்பு: சிறிதளவு வெல்லப் பாகை எடுத்து தண்ணீரில் போட்டு... கட்டைவிரல் மற் றும் ஆட்காட்டி விரலை பயன்படுத்தி எடுக்கும்போது, கையில் ஒட்டாமல் நன்கு உருட்ட வந்தால்... அதுதான் சரியான உருண்டை பாகு பதம்.

வெனிலா ஐஸ்கிரீம்

Image
தேவையானவை : கட்டிப்பால் - 1/4 கப் பால்மா - 1/2 கப் தண்ணீர் - 3/4 கப் வனிலா எஸன்ஸ் - 1/4 டீஸ்பூன் செய்முறை : 1.ஒரு பாத்திரத்தில் கட்டிப்பாலுடன் கால் கப் தண்ணீர் விட்டு வனிலா சேர்த்து கரைத்து கொள்ளவும்.பால்மாவை மீதி அரை கப் தண்ணீரில் கட்டி இலாமல் கரைக்கவும்.இரண்டையும் தனித்தனியே ஃபிரீஸரினுள் அரை மணிநேரம் வைத்து எடுக்கவும். 2.ஒரு பெரிய பாத்திரத்தில் ஜில் தண்ணீர் நிரப்பி அதனுள் பால்மா கரைசல் பாத்திரத்தை வைத்து கரண்டியால் நன்கு பொங்க பொங்க அடிக்கவும்.பின்னர் இதை கட்டிப்பால் கரைசலினுள் சேர்த்து மெதுவாக கலக்கவும். பின்னர் ஒரு தட்டையான பாத்திரத்தில் கலவையை ஊற்றி ஃபிரீஸரில்  ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும்.மீண்டும்  கரண்டியால் பொங்க பொங்க அடிக்கவும்.ஃபிரீஸரில் வைத்து இறுகியதும் எடுத்து பரிமாறலாம்.

ஆனந்த சுவை பாஸந்தி

Image
தேவையானவை : புல் கிரீம் பால் - 2 லிட்டர் குங்குமப்பூ - சிறிதளவு சர்க்கரை - அரை கப் அலங்கரிக்க தேவையானவை : நெய் - 1 டீஸ்பூன் பாதாம், முந்திரி, பிஸ்தா - 2 டேபிள் ஸ்பூன் செய்முறை : 1. அடி கனமான வாணலியில் பாலை ஊற்றி மெல்லிய தீயில் பாலை காய்க்கவும். பால் காய்ந்ததும் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கலந்து அதன் மேலே படியும் ஏடை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். 2. நடு நடுவே கலந்து, கலந்து பாலின் மேல் படியும் ஏடை, பாலின் அளவு 1/4 லிட்டர் அளவுக்கு வற்றும் வரை எடுத்து பாத்திரத்தில் போட்டவாறு இருக்க வேண்டும். 3. பிறகு பாத்திரத்தில் சேகரித்த ஏடு, சர்க்கரை சேர்த்து மெல்லிய தீயில் நன்கு கிளறவும். நெய்யில் தோலுரித்த பாதாம், முந்திரி, பிஸ்தா வறுத்து பாஸந்தியின் மேல் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

தேங்காய்ப்பால் பாயசம்

Image
தேவையானவை : முற்றிய தேங்காய் - 1 பச்சரிசி - 4 தேக்கரண்டி வெல்லம்(துண்டுகளாக்கியது) - 1 கப் சுக்குப்பொடி - 1 சிட்டிகை நெய் - 2 தேக்கரண்டி முந்திரிப் பருப்பு - 4 திராட்சை - 4 பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை செய்முறை : 1. ஒரு தேங்காய் முழுவதையும் துருவிக்கொள்ளவும். தேங்காய்த் துருவலில் பாதியளவை மிக்சியில் போட்டு சிறிது நீருடன் அரைத்து உலோக வடிகட்டியில் போட்டு முதல் பால், பிறகு இரண்டாம் பால் என்று பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 2. மீதமுள்ள தேங்காய்த் துருவலுடன், ஒரு மணி நேரம் ஊற வைத்த பச்சரிசியை மிக்சியில் போட்டு சற்று அரைத்து மேலும் இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்து மிக மிருதுவான விழுதாக அரைத்துக் கொள்ளவும். 3. அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, முந்திரிப் பருப்பு, திராட்சை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பிறகு அதே பாத்திரத்தில் அரைத்த விழுது, 4 கப் நீர் சேர்த்து நன்றாக வேகும் வரை மெல்லிய தீயிலேயே கிளறவும். 4. அரிசி நன்றாக வெந்தவுடன் தண்ணீருடன் கொதிக்க விட்டு தூசு நீங்க வடிகட்டிய வெல்ல நீர், முதல் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக ஒரு கொதி விடவும். ...

ஜவ்வரிசி பாயாசம்

Image
தேவையானவை : 1. ஜவ்வரிசி – 50 கிராம் 2. சக்கரை – 75 கிராம் 3. பால் – 1/2 லிட்டர் 4. ஏலக்காய் – 4 5. முந்திரி – 10 6. நெய் – 4 தேக்கரண்டி செய்முறை : 1. ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி அதில் ஜவ்வரிசியை வறுக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் பாதி பால் மற்றும் நீரை சேர்த்து கொதிக்கவிடவும். ஜவ்வரிசியை சேர்த்து அதன் கலர் மறைவுமளவிற்கு வேக வைக்கவும். மீதி பாலைவும் சேர்த்து கலக்கவும். 2. நன்றாக வேக விடவும். ஏலக்காய் பொடி சேர்க்கவும். பின்னர் சக்கரை சேர்த்து கிளறவும். முந்திரி நெய்யில் வறுத்து சேர்த்தால் சுவையான ஜவ்வரிசி பாயாசம் ரெடி... இதனை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்.

பலாப்பழ கேசரி

Image
தேவையான பொருள்கள் பலாப்பழ துண்டுகள்  -    2 கப் சர்க்க்ரை   -  1 கப் ரவை    - 1 கப் முந்திரி  பருப்பு  - 15  நெய்  - 4 ஸ்பூன் பால்   -  1 கப் ஏலக்காய் - 4  செய்முறை  சிறிது  நெய் விட்டு ரவையையும்   முந்திரி பருப்பையும்   பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும் பலா பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் பால்  சர்க்கரை  சேர்த்து  நன்கு  கொதிக்கவைத்து சர்க்கரை  கரைந்தவுடன்   ,  ரவை   , சர்க்கரை சேர்த்து கிளரவும். ரவை வெந்து  கேசரி பதம் வந்தவுடன்  பலாபழ துண்டு , முந்திரி,  நெய்  ,ஏலக்காய் சேர்த்து நன்கு கிளரி இறக்கவும். சுவையான பலாபழ கேசரி ரெடி

பச்சைப்பயறு ஸ்வீட் சுண்டல்

Image
தேவையான பொருட்கள்  பச்சைப்பயறு - ஒரு கப் பொடித்த வெல்லம் - அரை கப் தேங்காய்த் துருவல் - கால் கப் ஏலக்காய்த்தூள் - சிறிது உப்பு  -  சிறிதளவு செய்முறை  பச்சைப்பயறை வெறும் கடாயில்   வறுத்து  சிறிதளவு   உப்பு   தேவைாயன அளவு  தண்ணீர்   சேர்த்து   குக்கரில் 2 விசில்  விட்டு வேக வைத்து கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த  மிளகாய் தாளித்து, பச்சைப் பயறைக் கொட்டி, வெல்லத்தைப் பொடித்துச் சேர்க்கவும்.  சுண்டல் நன்கு சேர்ந்து வந்ததும், தேங்காய்த் துருவல் போட்டுக்  கிளறி இறக்கவும்.  சுவைாயன பச்சைப்பயறு  ஸ்வீட் சுண்டல் ரெடி